தெரியுமா?: கான் அகாடமி: தமிழ் இணையதளத் திறப்பு விழா
வெற்றிவேல் அறக்கட்டளை கலிபோர்னியா மாநிலத்தின் விரிகுடாப் பகுதியில் இயங்கி வரும் பொதுத்தொண்டு நிறுவனம். உலகெங்கிலும் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு சேர்ப்பது இதன் முதன்மைத் திட்டம் ஆகும். அவ்வகையில், கான் அகாடமியின் கல்வி வளங்களைத் தமிழாக்கம் செய்யும் பணியில் வெற்றிவேல் அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது.

அண்மையில் கான் அகாடமியுடன் இணைந்து வெற்றிவேல் அறக்கட்டளை 'கான் அகாடமி-தமிழ்' இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்தளத்தில் தமிழ்வழி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சிகளும் காணொலிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புதிய இணைய தளத்தின் திறப்பு விழா, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அறக்கட்டளையுடன் இணைந்து செயலாற்றிய அமைப்புகளைச் சிறப்பிக்கும் வண்ணமும், நன்கொடையளித்த கொடையாளர்களைப் பாராட்டும் வண்ணமும் அமையும். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்கார் விருது பெற்ற திரு கொட்டலங்கோ லியோன் மற்றும் ஃப்ரீமான்ட் நகரின் துணைமேயர் மருத்துவர் ராஜ் சல்வான் கலந்து கொள்கின்றனர்.

அனைவரும் வருக. விழாவில் பங்கேற்க eventbrite என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.

சிவகாமி இராமையா & சொக்கலிங்கம் கருப்பையா,
இணை நிறுவனர்கள்

© TamilOnline.com