கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்


துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் படம் இது. ரிது வர்மா கதாநாயகி. தொலைக்காட்சியில் நடித்துப் புகழ்பெற்ற ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். 'மசாலா காஃபி' என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைக்கின்றனர். தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இப்படம் பற்றி இவர், "இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இதைவிடபொ பொருத்தமானது வேறெதுவும் இல்லை" என்கிறார். படத்தில் கெளதம் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com