கணிதப் புதிர்கள்
1. 1 முதல் 9 வரை உள்ள எண்களைக் கொண்டு கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ கணிதச் சமன்பாடுகளைப் பயன்படுத்தி விடை 100 வரச்செய்ய வேண்டும். இயலுமா?

2. ராமுவிடமும், சோமுவிடமும் சம அளவு பணம் இருக்கிறது. ராமு எவ்வளவு கொடுத்தால், அவனைவிடச் சோமுவிடம் பத்து டாலர் அதிகமாக இருக்கும்?

3. ஒரு வருடத்திற்கு 365 நாள் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த எண்ணின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

4. இரண்டு எண்களுக்கிடை உள்ள வித்தியாசம் 3; அவற்றின் வர்க்கங்களின் வித்தியாசம் 51 என்றால் அந்த எண்கள் எவை?

5. ராஜா சில பூக்களை வாங்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்றான். ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் செல்வதற்கு முன்னால் அங்குள்ள குளத்தில் மூழ்கி வந்தான். ஆச்சரியப்படும்படி அவன் கையில் இருந்த பூக்கள் இரு மடங்காகின. ஒவ்வொரு கோவிலிலும் அவன் எட்டுப் பூக்களைச் சமர்ப்பித்தான். மூன்றாம் கோவிலை விட்டு வெளிவரும் போது அவன் கையில் பூக்கள் மீதமில்லை என்றால் முதலில் அவன் வாங்கிய பூக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com