கணிதப் புதிர்கள்
1) ஒரு குளத்தில் இரண்டு வாத்துகளுக்கு முன்னால் 2 வாத்துகள் இருந்தன. இரண்டு வாத்துகளுக்குப் பின்னால் 2 வாத்துகள் இருந்தன. இரண்டு வாத்துகளுக்கு அருகிலும் 2 வாத்துகள் இருக்கின்றன என்றால் அங்கிருந்த மொத்த வாத்துக்களின் எண்ணிக்கை என்ன?

2) 7 ? 3 ? 7 ? 3 = 24

கேள்விக்குறிகள் உள்ள இடத்தில் வரவேண்டிய கணிதக் குறியீடுகள் எவை?

3) ஒரு புத்தகத்தின் விலை $1 + அந்தப் புத்தகத்தின் விலையில் பாதியும் சேர்ந்தது என்றால் அந்தப் புத்தகத்தின் விலை என்ன?

4) ராமுவிற்கு எட்டு வயதாக இருக்கும்போது அவனது தந்தையின் வயது 31. இப்போது அவருடைய வயது ராமுவின் வயதைப் போல இரு மடங்காக உள்ளதென்றால் ராமுவின் வயதென்னா, அவனுடைய தந்தையின் வயதென்ன?

5) ஒரு பெட்டியில் 20 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்கள் ஆளுக்கு இரண்டு வீதமும், பெண்கள் ஆளுக்கு 1/2 வீதமும், மீதமுள்ளதை குழந்தைகள் ஆளுக்கு 1/4 பங்கு வீதமும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் அவர்களின் மொத்த எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எத்தனை பேர் அதனைப் பகிர்ந்து கொண்டனர்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com