தொரட்டி


ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையைச் சொல்கிறது தொரட்டி. நாயக, நாயகியாக ஷமன்மித்ரூ, சத்யகலா அறிமுகமாகின்றனர். ஜெயசீலன், முத்துராமன், அழகு, குமணன், ஜானகி, ஸ்டெல்லா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சிநேகன் பாடல்களை எழுத, வேத்சங்கர் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஜித்தின் ரோ‌ஷன் அமைக்கிறார். பி. மாரிமுத்து இயக்கம். "1980களில் விளைநிலைங்களில் ஆட்டுக்கிடை போட்டுப் பிழைப்பு நடத்திய கீதாரி குடும்பங்களின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவமே 'தொரட்டி.' இவர்களுக்குள் கொலை, கொள்ளை செய்யத்துணியும் ஒரு கருப்பு ஆட்டுக் கூட்டம் நுழைகிறது. என்ன ஆகிறதென்பதைப் படத்தில் பார்க்கலாம்" என்கிறார் மாரிமுத்து.

அரவிந்த்

© TamilOnline.com