நோட்டா


தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் தமிழில் அறிமுகமாகும் படம் நோட்டா. நாயகியாக மெஹ்ரீன் நடிக்கிறார். உடன் நாசர், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அரிமா நம்பி, இருமுகன் என்ற வெற்றிப் படங்களைத் தந்த ஆனந்த சங்கர் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு இசை சாம் சி.எஸ். இது பரபரப்பான அரசியல் படம். படத்தில் இயக்குநர் ஆனந்த் சங்கரின் குரு ஏ.ஆர். முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் வருகிறாராம்.

அரவிந்த்

© TamilOnline.com