வண்டி


நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விதார்த்தின் அடுத்த படம் வண்டி. நாயகி, சாந்தினி. உடன் ஸ்ரீராம் கார்த்திக், எம்.ஆர். கிஷோர்குமார், ஜான் விஜய், அருள்தாஸ், சாமிநாதன், மதன்பாப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை சிநேகன், சங்கீத் எழுத இசையமைத்திருக்கிறார் சூரஜ் எஸ் குரூப். வசனத்தை அரசுவுடன் இணைந்து ரஜீஷ் பாலா எழுதியிருக்கிறார். படத்தின் கதையும் இயக்கமும் அவரே. மூன்று தளங்களில் நடக்கும் இக்கதையில் ஒரு பாத்திரமாக வருகிறது Yamaha RX135 பைக். அதனாலேயே படத்திற்கு வண்டி என்று பெயர் சூட்டியுள்ளனர்.

அரவிந்த்

© TamilOnline.com