TNF-ஒஹையோ: நெடுநடை
ஆகஸ்ட்18, 2018 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளையின் (Tamil Nadu Foundation-Central Ohio) சார்பில் மூன்றாம் முறையாக நெடுநடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்வு முழுவதும் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. ஈகை நிறைந்த நெஞ்சங்களில் மழை வீழாதிருக்க இயற்கை அன்னை தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டதுபோல் காட்சியளித்தது. பங்கேற்றோர் நடையில் இருந்த வேகமும், முகத்தில் இருந்த புன்சிரிப்பும் காணக் கண்கோடி வேண்டும். இருநூறுக்கும் மேலான அன்பர்கள் பங்கேற்றுக் கிட்டத்தட்ட $10,000 வெள்ளி திரட்ட உதவினர்.

தொடர்புகொள்ள: tnf.centralohio@gmail.com
இணையதளம்: central-ohio.tnfusa.org
முகநூல்: www.facebook.com/TNFCentralOhioChapter

மணி பெரியகருப்பன்,
கொலம்பஸ், ஒஹையோ

© TamilOnline.com