மிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை
ஆகஸ்டு 26, 2018 அன்று, மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து 5 கி.மீ. நெடுநடை நிகழ்ச்சி நடத்தியது. இதில் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழன்பர்கள் பங்கேற்றனர். 2015ம் வருடம் நாமக்கல் மாவட்டத்தின் ஆறு அரசு பள்ளிகளில் ஆரம்பித்த, TNF-ABC பணித்திட்டம் தொடர, இந்த விழாவில் திரட்டிய 7000 டாலர் நன்கொடையாக வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவரும் தாய்மண்ணில் வாழும் படிப்பில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆதரவளித்த மனத் திருப்தியுடன் பிரியாவிடை பெற்றனர்.

அண்ணாதுரை முருகேசன்,
டெட்ராய்ட், மிச்சிகன்

© TamilOnline.com