மூவர் கூட்டணியில் உருவாகிறது 'ஜுன் R'
கடந்த பத்தாண்டுகளாக விளம்பரப் படங்களை இயக்கி வந்த ரேவதி எஸ். வர்மா முதன்முதலாக தமிழ்த் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதன் மூலம் பெரிய திரை உலகில் கால் பதித்திருக்கிறார். 'ஜுன் R' என்கிற வித்தியாசமான தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஜோதிகா, குஷ்பூ மற்றும் சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சரிதாவும், குஷ்புவும் நடிக்கும் இப்படத்திற்கான கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றைக் கவனிக்கிறார் ரேவதி எஸ். வர்மா.

பிரபல நாயகன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் யார் அவர் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஏ. அன்சாய் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மணிவண்ணன், சந்தானம் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். வருகிற செப்டம்பர் மாதம் 'ஜுன் R' திரைக்கு வரவிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com