96


விஜய் சேதுபதி, த்ரிஷா நாயக, நாயகியாக நடிக்கும் படம் 96. நீண்ட இடைவெளிக்குப் பின் ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். உடன் காளிவெங்கட், ஆடுகளம் முருகதாஸ், ஷ்யாம் பிரசாத், விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பசங்க', 'சுந்தரபாண்டியன்', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இசை: கோவிந்த் மேனன். ஒரே இரவில் நடக்கும் காதல் கதை இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com