சிகாகோ: வறியோர்க்கு உணவு
மே 27, 2018 அன்று இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் மூன்றும் இணந்து இலங்கை தமிழீழப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிகாகோவின் புறநகரமான அரோராவிலுள்ள Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506; Web: www.hesedhouse.org) இல்ல வாசிகளுக்கு உணவு வழங்கின. இதில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்ப்பயிலும் மாணாக்கர்கள் (சாமா, சுபாசு, முகில், இரித்திக்கு, பிரின்டெட்டு), சிகாகோ புறநகர் பகுதிகளில் வாழும் தமிழ்த் தொண்டர்கள் (திருவாட்டி. சுஜாதா, வனிதா, பிரியா, திரு. கணேசன், சாக்கரடீசு, சிரீகந்தக்குமார், தரணிதரன் மற்றும் பாபு) பங்கேற்று உணவு தயாரித்து, 75 மேற்பட்ட வறியோர்க்கு உணவு வழங்கினர்.

அங்கிருந்தோருக்கு தமிழீழப் போர் பற்றிய விவரக்குறிப்பும், திருவள்ளுவரின் வாழ்முறை குறித்த குறட்பாக் குறிப்புக்களும், பிறநாட்டுப் பேரறிஞர் கண்ணோட்டத்தில் தமிழர் குறித்த குறிப்புக்களும் அடங்கிய சிற்றிதழ் ஒன்றினையும், அடுத்துவரும் காலைப்பொழுது உணவிற்கென சிறு தின்பண்ட உணவினையும் வழங்கினர். இல்லவாசிகள் நன்றி தெரிவித்தனர். 2018ம் ஆண்டின் மூன்றாம் வறியோர்க்கு உணவு நிகழ்வு இவ்வாறு செவ்வனே நடந்து முடிந்தது. Hesed House பொறுப்பாளர் திருவாட்டி சாண்டி அவர்களுக்கும் மற்ற அமைப்பாளர்களுக்கும் அமைப்புக்கள் மூன்றின் சார்பிலும் திரு. பாபு தம் நன்றியைத் தெரிவித்தார்.

வ.ச. பாபு,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com