பனிப்படுகை
மனைக்கு மகுடம் சூட்டி
சாலைக்குச் சேலை சார்த்தி
பூவிற்குப் போர்வை போர்த்தி
படர்ந்த பொருள்மேல் எல்லாம்
அடர்ந்த உருவம் கொண்டு
புறம் திரிந்த மனிதனை
அகம் அறிந்து அமைய
குளிர்ப் படையோடு
பனிமனிதனின் ஆட்சி!

ரகோத்தம ராவ்

© TamilOnline.com