அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆண்டுவிழா
மே 12, 2018, சனிக்கிழமை அன்று மதியம் 11.30 மணிமுதல் ஹின்ஸ்டேல் சௌத் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் (7401 Clarendon Hills Road, Darien, IL: 60561) அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் ஆண்டுவிழா நடைபெறும். அவ்வமயம் திருக்குறள் ஒப்பித்தல், தமிழ்த்திறன் போட்டி, 'வாழ்வில் திருக்குறள்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, பழமொழிப் போட்டி, 'ஒருசொல் - பலபொருள்' ஆகியவை நடைபெறும். மேலும் பள்ளி மாணாக்கர் வழங்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். பங்கேற்றோருக்கும் போட்டிகளில் வென்றோருக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சிக்கு வருவோர் மே 5ம் நாளுக்குள் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல்: thamizhppalli2003@yahoo.com

வ.ச. பாபு,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com