கன்னிராசி


1985ல் பிரபு, ரேவதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 'கன்னிராசி.' தற்போது அதே பெயரில் மீண்டும் ஒரு படம். விமல், வரலட்சுமி நாயக, நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு நடிக்கின்றனர். படத்தில் காமெடி தூக்கலாக இருக்குமாம். எஸ். முத்துக்குமரன் இயக்குகிறார். பாடல்களை யுகபாரதி எழுத, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். "ஒரே குடும்பத்தில் அனைவரும் 'கன்னிராசி'யில் பிறக்கின்றனர். அவர்களுக்கு காதல் திருமணம் நடக்கிறது. கடைக்குட்டி விமல் மட்டும் காதலை வெறுக்கிறார். அப்போது எதிர்வீட்டுக்கு வரலட்சுமி குடிவருகிறார். காதல் பிறந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் இயக்குநர். நல்ல ராசியான தலைப்புதான்.

அரவிந்த்

© TamilOnline.com