எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே


நகைச்சுவை நடிகர் ஜெகன் நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகி மோனிகா. முக்கிய வேடங்களில் பிறைசூடன், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா நடிக்கின்றனர். பாடல்களை பிறைசூடனும் காரைக்குடி நாராயணனும் எழுத, இசையமைக்கிறார் கே.ஆர். கவின். கதை, திரைக்கதை, வசனத்தை காரைக்குடி நாராயணன் எழுத, இயக்குகிறார் முருகலிங்கம். "கதைப்படி கந்து வட்டி கொடுப்பவர் மகளை ஒரு பத்திரிகையாளர் காதலிக்கிறார். இதையறிந்த கந்து வட்டிக்காரர் மகளின் காதலனைக் கொலை செய்ய ஆளனுப்புகிறார். காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைகிறது. அதன் பிறகு? படத்தைப் பாருங்கள்" என்கிறார் கோலிவுட் கோவிந்து. லட்சுமி என்ற பசுமாடும் முக்கிய வேடத்தில் நடிக்கிறதாம்.

அரவிந்த்

© TamilOnline.com