ஏப்ரல் 2018: வாசகர் கடிதம்
மார்ச் தென்றலில் கோபி ஷங்கர் ஆச்சரியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த விவரங்களை எப்போதும், எங்கேயும், என்றும் கேள்விப்பட்டதே இல்லை. தென்றலில்தான் முதன்முதலாகப் படிக்கின்றேன் படிக்கப் படிக்க வியப்புத் தாங்கமுடியவில்லை. மிகவும் அழகாக, புரியும்படி விளக்கமாக நேர்காணல் கண்டுள்ளீர்கள். ஆண், பெண், திருநங்கை, திருநம்பி, இடைப்பாலினர், ஒற்றுமை வேற்றுமையைத் தகுந்த விவரங்களுடன் சொல்லியிருப்பது மிகவும் முக்கியமானதாகும் இந்த விழிப்புணர்வுச் செய்திகள் அதிகம் மக்களிடம் கண்டிப்பாகக் கொண்டு சேர்க்கப்பட வேண்டியவை ஆகும். இந்தச் சிறுவயதில் அவருடைய பொறுப்புணர்ந்த செயல்பாட்டுக்கு நாம் அனைவரும் உதவுதல் மிகவும் பயனளிக்கும் என்று நினைக்கின்றேன். தென்றலுக்கு நன்றி.

தமயந்தி பற்றிய விவரங்களும் அவர் ஆற்றிவரும் செயல்களும் மிகவும் சிறப்பு. அவரின் கவிதைகள் உயிரோட்டத்துடன் உள்ளன. வித்தியாசமான எண்ணங்கள், வித்தியாசமான ஓவியங்கள் தனது தூரிகையே தன் எண்ணங்களின் பிரதிபலிப்பு என்று ஓவியங்களுக்கு உயிர்கொடுக்கும் துணிச்சலான ஓவியர் ஸ்வர்ணலதாவிற்கு வாழ்த்துக்கள். சமூகசேவைதான் மூச்சு என்னும் தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் அவர்களைப்பற்றிய தகவல்கள் அருமை.

சசிரேகாசம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com