காளிதாஸ்
வித்தியாசமான படங்களில் நடித்துவரும் பரத் நாயகனாக நடிக்கும் படம் 'காளிதாஸ்.' கேரள அழகி 'ஷீத்தல்' நாயகியாக அறிமுகமாகிறார். பல குறும்படங்கள் இயக்கிப் புகழ்பெற்ற ஸ்ரீசெந்தில் இதன்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சுரேஷ் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றுமொரு முக்கியப் பாத்திரத்தில் கண்ணாதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார். இசை: விஷால் சந்திரசேகர். அதிரடி ஆக்‌ஷன் கொண்ட இப்படத்தில் பரத்திற்குக் காவல்துறை அதிகாரி வேடம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com