தகடூர் கோபி
தமிழ் இணைய உலகிற்குச் சிறப்பாகப் பங்களித்துள்ள தகடூர் கோபி (41) மாரடைப்பால் காலமானார். அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை உருவாக்கியவர் இவர். கணிப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ள இவர், சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத் நகரங்களில் மென்பொருள் துறையில் பணியாற்றியவர். தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கியுள்ளார். இணையப் பயன்பாட்டிற்காக பல்வேறு செயலிகளை உருவாக்க உழைத்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.



© TamilOnline.com