கணிதப்புதிர்கள்
1) விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

1 + 2 = 3
2 + 3 = 8
3 + 4 = 15
5 + 6 = ?

2) ஒரு தந்தை மற்றும் மகனின் வயதைக் கூட்டினால் 66 வருகிறது. தந்தை வயதின் தலைகீழ் எண்ணே மகனின் வயது என்றால் அவர்கள் இருவரது வயது என்ன?

3) ஒரு குதிரை லாயத்தில் அங்கு பணியாற்றும் மனிதர்களையும் சேர்த்து மொத்தம் 36 தலைகளும் 108 கால்களும் இருந்தன என்றால் குதிரைகள் எத்தனை, மனிதர்கள் எத்தனை?


4) வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

7, 7, 14, 17, 21, 27, 28, 37, 35, ?, ?

5) ஒரு கூட்டத்தில் ஆணும், பெண்ணும், குழந்தைகளுமாக 70 பேர் இருந்தனர். ஆண்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு குழந்தைகளும், குழந்தைகளின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு பெண்களும் இருந்தனர் என்றால், ஆண்கள் எத்தனை, பெண்கள் எத்தனை, குழந்தைகள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com