முதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...
இளையராசா அவருக்குப் பிடித்ததாய் ஆறோ அல்லது ஏழு பாடல்களை வைத்துக் கொண்டு. அவற்றின் முதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும் வைத்து, அவைகளை இந்தக் கால சீர்த்தனைகள் போலவே மாற்றி இசைக்கப் பார்த்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சியில் சிவபுராணம் கொஞ்சம் முன்னும் பின்னுமாய் ஆகியிருக்கிறது. அதற்குப் போய் இவ்வளவு கிடுக்க -criticize- செய்ய வேண்டுமா என்றும் தோன்றுகிறது. கலிவெண்பாவை இப்படி மாற்றி மாற்றி வேறு வேறாக இசைபடப் பாடும் பொழுது எனக்கு வியப்பு மற்றும் மகிழ்வு தான் வந்தது. அதே போல அறுசீர் விருத்தமான திருபொற்சுண்ணத்தை தந்தனானா மெட்டிற்கு மாற்றி பாடும் பொழுது முற்றிலும் வியந்து போனேன். அந்தத் தந்தனாவிற்கும் தாளத்திற்கும் நடுவில் நம்மால் உலக்கையைத் தூக்கி உரலில் பெண்கள் சுண்ணம் இடிப்பதை மனதார உருவகிக்க முடிகிறது. இந்தப் பாடலுக்கு இதைவிட வேறு எப்படி இசையமைக்க முடியும் என்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அறிஞர் இராம. கி., சென்னை,
அகத்தியம் மடற்குழுவில் agathiyar.yahoogroups.com

© TamilOnline.com