பொங்கல் வெளியீடுகள்
பொங்கலுக்கு வரவிருக்கும் படங்களில் சில இவை.

இரும்புத்திரை



விஷால், சமந்தா நடிக்கும் படம் இரும்புத்திரை. வில்லனாக அர்ஜுன் தோன்றுகிறார். ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க, மித்ரன் இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் படம் இது.

*****


தானா சேர்ந்த கூட்டம்



'ஸ்பெஷல் 26' படத்தைத் தழுவி உருவான படம் எனச் சொல்லப்படுகிறது. சூர்யா நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர். கார்த்திக், செந்தில், தம்பி ராமையா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அநிருத் இசை. ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன.

*****


மன்னர் வகையறா



விமல், ஆனந்தி நடித்துள்ள படம் 'மன்னர் வகையறா'. இவர்களுடன் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பூபதி பாண்டியன் இயக்குகிறார். சிரிப்புக் கலவரமாக உருவாகி இருக்கிறதாம் இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com