தெரியுமா?: ATEA Boot Camp for Startups
அமெரிக்கத் தொழில்முனைவோர் சங்கம் இந்த நிகழ்ச்சியை டிசம்பர் 15, 2017 வெள்ளிக்கிழமை அன்று சான் ப்ரான்சிஸ்கோவில் ஏற்பாடு செய்துள்ளது. டெக்ஸ்டார்ஸ் அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் இந்த ஒருநாள் நிகழ்வு ஆரம்பநிலை நிறுவனங்கள் விற்பொருளை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்தது. இதனை Google LaunchPad தனது SFO வளாகத்தில் நடத்த உதவுகிறது. இதில் பங்கேற்க 30 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல்: info@ateausa.org

விண்ணப்பிக்க இறுதிநாள்: டிசம்பர் 10, 2017
அதிகத் தகவலுக்கு: ateausa.org

நர்சி கஸ்தூரி

© TamilOnline.com