வாண்டு


சீனு, ஷிகா நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் வாண்டு. இவர்களுடன் மஹாகாந்தி, ரமா, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மோகன் ராஜன் பாடல்களை எழுத ஏ.ஆ. நேசன் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வாசன் ஷாஜி. இவர் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். குத்துச் சண்டையை அடிப்படையாக வைத்து வடசென்னையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் படத்தின் கரு. படத்தில் அடிதடிக்கும் ஆட்ட பாட்டத்துக்கும் பஞ்சமிருக்காது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com