பொட்டு


பரத் நாயகனாக நடிக்கும் படம் பொட்டு. நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, சாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை விவேகா, சொற்கோ, ஏக்நாத், கருணாகரன் எழுத, அம்ரீஷ் இசையமைக்கிறார். வசனம் செந்தில். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான். "முழுக்க முழுக்க மருத்துவக் கல்லூரிப் பின்னணியில் படுபயங்கரமான ஹாரர் படமாகப் பொட்டு உருவாகி உள்ளது. மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த அகோரியாக நமீதா நடிக்கிறார். இனியா மலைவாசிப் பெண். பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ மாணவர்கள்" என்கிறார் படத்தைப்பற்றி இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com