இட்லி


இந்தத் தலைப்பில் ஒரு படம். அதில் நாயகன், நாயகி என்று யாருமில்லை. மூன்று பாட்டிகள், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களே படம். இதில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகியோர் பாட்டிகளாக நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் மனோபாலா, தேவதர்ஷிணி, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் வித்யாதரன். "படத்தில் பாடல்கள், ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் கிடையாது. இதுதான் 'இட்லி' படத்தில் ஸ்பெஷல். இது உங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர். நவம்பரில் வெளியாகிறது இட்லி.

அரவிந்த்

© TamilOnline.com