NETS: வருடாந்திர பிக்னிக் 2017
ஆகஸ்ட் 12, 2017 அன்று ஹோப்கின்டன் மாநிலப் பூங்காவுக்கு நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தினர் சுற்றுலாச் சென்றனர். காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை ஆட்டம், ஓட்டம் கொண்டாட்டமாக நடந்த இதில் 350 பேருக்கு மேல் பங்கேற்று மகிழ்ந்தனர்.

இந்த வருடத்திற்கான கிரிக்கெட் சேம்பியன்ஷிப் நான்கு அணிகளுக்கிடையே நடைபெற்றது. அதில் 'பில்லெரிக்கா பாய்ஸ்' வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றினர். 'பாட்லக்' முறையில் உணவுக்குப் பிறகு விளையாட்டு. குழந்தைகளின் வயதுக்கேற்ப விளையாட்டுகளைப் போட்டிகளை நடத்தி வெற்றிபெற்ற முதல் மூவருக்குப் பரிசுகளும், பங்கேற்ற குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பெரியவர்களும் (ஆண், பெண்) பைக் ரேஸ், ஆப்பிள் கடித்தல், ஸ்கிப்பிங் ரேஸ், எலுமிச்சை ஸ்பூன் விளையாட்டு என்று குதூகலித்தனர்.

சுதந்திரதின அணிவகுப்பில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு, 'வந்தே மாதரம்' முழங்கினர்.

மதிய உணவுக்குச் சிறப்பு அம்சமாக தோசை ஸ்பெஷல். 500க்கும் மேற்பட்ட வகைவகையான தோசைகள்! புதிய உறுப்பினர்களின் பதவியேற்பும் நடந்தேறியது. மாலையில் சுடச்சுடக் காஃபிக்குப் பின் மனதின்றி வீடு திரும்பினோம்.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com