தீபாவளி: உன்னிகிருஷ்ணன் மெல்லிசை
அக்டோபர் 21, 2017 அன்று மாலை 6 மணிக்கு மில்பிடாஸ் India Community Center (ICC) அரங்கத்தில் தீபாவளி இரவு விருந்து ஒன்றை சாயி குளோபல் மிஷன் அமைப்பினர் (saiglobalmission.org) நடத்துகிறார்கள். இதில் இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான திரு. உன்னி கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் மெல்லிசைப் பாடல்களைப் பாடி விருந்தினர்களை மகிழ்விக்க உள்ளார்.

இந்தியாவில் ராய்ப்பூர் (Raipur) மற்றும் பல்வல் (Palwal) நகரங்களில் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவமனைகளின் கட்டமைப்பு மற்றும் சேவையை விரிவாக்க இதில் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படும். அன்புள்ளம் கொண்டோரின் ஆதரவை சாயி குளோபல் மிஷன் நாடுகிறது.

பாலாஜி சண்முகம்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com