வீரத்திருவிழா


சத்யா, செல்வம், செல்வா என்ற புதுமுகங்கள் நாயகர்களாகவும், தேனிகா நாயகியாகவும் நடிக்கும் படம் வீரத்திருவிழா. பொன்வண்ணன், காதல் சுகுமார், நசீர், சிந்தியா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். E.S. ராம் இசை. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் விஜய்முரளிதரன் (எ) வைரமணி. இப்படம் பற்றி இவர், "அந்தக் காலத்தில் ஜல்லிக்கட்டு வீரத்தின் வெளிப்பாடு. ஐந்து இளைஞர்கள் பாடுபட்டு ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை வெல்கிறார்கள் என்பது படத்தின் கதை" என்கிறார். மஞ்சுவிரட்டுக்குப் புகழ்பெற்ற சிராவயல், ஆராவயல், நேமம், காரைக்குடி, அமராவதி புதூர் போன்ற இடங்களில் இது படமாக்கப்பட்டுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com