STF: 'NextGen - வளமான எதிர்காலம்'
செப்டம்பர் 16, 2017 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏழாவது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி கார்லண்ட் ஆர்ட்ஸ் சென்டரில் நடக்கவுள்ளது.

'NextGen - வளமான எதிர்காலம்' என்ற பெயரில் நடைபெறும் இந்த விழாவில் திரு. அருண் அழகப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வாழ்க்கை, நாடு, சமுதாயம் ஆகியவற்றில் கல்வியின் பங்குபற்றிச் சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான ஆயத்தங்கள் பற்றியும் தனியாக உரையாற்ற உள்ளார். 'Inspirational Speaker' Chuck Hogan 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்த உள்ளார். நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்கும் நாடகமும், நடனமும் இடம்பெறுகின்றன.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com