நாதலயா: 'குருபாத சமர்ப்பணம்'
செப்டம்பர் 9, 2017 அன்று மாலை 4 மணிக்கு சன்னிவேல் நாதலயா இசைப்பள்ளி 'குருபாத சமர்ப்பணம்' என்ற இசைநிகழ்ச்சி ஒன்றை மில்பிடாஸில் உள்ள சிலிகான் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் நடத்த உள்ளது. ஸ்ரீ காஞ்சி பரமாசார்யார் அவர்களையும், அன்னை காமாட்சியையும் போற்றும் வண்ணம் அமைந்த பாடல்களால் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி இது. உருக்கமான பாடல்களோடு, கண்களுக்கு விருந்தாகப் பல புகைப்படங்களும், பாடல்களின் பொருளும் பவர் பாயின்ட்டில் காண்பிக்கப்பட உள்ளன. மேலும் மஹாபெரியவரின் மகிமையையும் பாடல்களின் விவரணங்களையும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும்.

நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி, சான்ட க்ளராவில் உள்ள ஶ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கப்படும். சிறப்பு விருத்தினர்களாக வயலின் வல்லுனரும் குருவுமான திருமதி. லால்குடி ஶ்ரீமதி பிரம்மானந்தம் அவர்களும், சமஸ்கிருதத்தில் உயர்பட்டம் பெற்ற திரு. ரா. ப்ரம்மானந்தம் அவர்களும் வரவுள்ளனர். நாதலயா பள்ளி உயர்நிலை இசை மாணவர்கள் பாடல்களை இசைப்பர். வயலினில் குமாரி நயன்தாரா நரசிம்மன், மிருதங்கத்தில் அருண் ஸ்ரீராம், கடத்தில் ஏ.வி. கிருஷ்ணன் ஆகியோர் பக்கம் வாசிக்கின்றனர்,

நிகழ்ச்சியை நாதலயா பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி. சாந்தி ஸ்ரீராம், மற்றும் திரு. ஸ்ரீராம் பிரம்மானந்தம் வடிவமைத்து இயக்குகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு: fb/nadalayaschoolofmusic

சாந்தி ஸ்ரீராம்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com