குரு உச்சத்துல இருக்காரு


குரு ஜீவா நாயகனாக அறிமுகமாகும் படம் 'குரு உச்சத்துல இருக்காரு'. நாயகியாக ஆரா நடிக்கிறார். உடன் ஆர். பாண்டியராஜன், எம்.எஸ். பாஸ்கர், இமான், ஸ்ரீரஞ்சனி, மனோ, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா. தண்டபாணி. தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் என்பதற்காக, தன் காதலியைப் பார்க்க விரும்பும்போதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தைப் பெரியதாக்கி, அதற்குப் பஞ்சாயத்துக் கூட்டி, கலாட்டா செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் குரு ஜீவா. நல்ல தந்திரம்தான்!

அரவிந்த்

© TamilOnline.com