கிருஷ். ராமதாஸ்
சிற்றிதழ் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கிருஷ். ராமதாஸ் காலாமானார். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என விளங்கிய ராமதாஸ், தமிழ்ச் சிற்றிதழ்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அதற்காகவே "சிற்றிதழ்கள் உலகம்" என்ற இதழைத் துவங்கி நடத்திவந்தார். அவ்விதழில் உலகெங்கும் இயங்கிவரும் பல்வேறு சிற்றிதழ்கள் குறித்த அறிமுகக் கட்டுரைகளையும், அவற்றோடு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கதை, கவிதை, கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார். மின்னிதழாகவும் அது வெளியானது. பெரம்பலூரில் பிறந்து துபாயில் பணிசெய்து வந்த இவர், சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாகச் சொந்த ஊரில் வசித்துவந்தார். உடல்நலிந்தும் பின்னூட்டங்கள் மூலம் சிற்றிதழ்களை ஊக்குவித்தார். பழைய சிற்றிதழ்களைச் சேகரித்தும் அவற்றை மின்னூலாக்கம் செய்தும் வந்த இவர் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டார். அறுவைசிகிச்சை முடிந்து குணம்பெற்று வந்த வேளையில் திடீரென ஆகஸ்ட் 18, 2017 அன்று காலமானார்.



© TamilOnline.com