கேரட் தொக்கு
தேவையான பொருட்கள்
கேரட் - 1/4 கிலோ
தேங்காய்த்துருவல் - 1/4 மூடி
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
சமையல் எண்ணெய் - 2 தேயிலைக்கரண்டி
கடுகு - சிறிதளவு (தாளிக்க)
உளுத்தம்பருப்பு - சிறிதளவு (தாளிக்க)
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
கேரட்டைத் துருவி வைத்துக்கொள்ளவும். பச்சைமிளகாய், தேங்காய், வெங்காயம், கறிவேப்பிலை இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கேரட்டைப் போட்டு வதக்கவும். பின்பு அரைத்த மசாலாவுடன், தேவையான உப்புச் சேர்த்து போதுமான தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும். எல்லாம் நன்றாகக் கலந்து வெந்து வருகையில் இறக்கிவிடவும். லேசான இனிப்புள்ள இந்த காரத்தொக்கு சாதத்துடன் கலந்து சாப்பிடவும், பூரி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

வசந்தா வீரராகவன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com