திரைப்பட உலகில் திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தற்போது சினிமாவின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.

சுப. தமிழ்வாணன் இயக்கத்தில், விவசாயிகளின் பிரச்சினைகளை மையக் கருத்தாகக் கொண்டு ‘கரிசல்மண்’ என்ற புதிய படம் ஒன்று வளர்ந்து வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தொல். திருமாவளவன். படத்திற்கான நாயகன், நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

படத்தில் வில்லனாக இயக்குநர் செந்தில்நாதன் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை கவனிக்கிறார் சுப. தமிழ்வாணன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com