சான் அன்டோனியோ: கோடை குதூகலம்!
சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கம் இரண்டு மாதங்களாக வெவ்வேறு இடங்களில் கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வந்தது. ஜூன் 24ம் தேதி குழந்தைகளுக்கான முழுநாள் விளையாட்டுப் போட்டிகள், ஜூலை 1ம் தேதி மகளிருக்கான பூப்பந்து, கைப்பந்து, எறிபந்து போட்டிகள் போன்றவை நடைப்பெற்றன. இவற்றோடு வார இறுதிகளில் ஆடவருக்கான 'SATS கோப்பை 2017' கிரிக்கெட் போட்டித்தொடர் இரு மாதங்களாக நடைபெற்று வந்தது. அனைத்து வெற்றியாளர்களுக்கும் தமிழ்ச்சங்கம், ஆகஸ்டு 5 அன்று ஏற்பாடு செய்துள்ள சுற்றுலாவின் போது பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்க இருக்கிறது. இனிதான ஒரு கோடை விடுமுறையின் முத்தாய்ப்பாக இது அமையும்.

போட்டிகளின் நடுவே சற்று இளைப்பாறும் வகையில் ஜூன் 10 அன்று யோகாசனப் பட்டறையும், ஜூலை 9 அன்று மதுவந்தி அருணின் 'மஹம்' நாடகக் குழுவின் சார்பாக 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' என்ற நகைச்சுவை நாடகமும் இடம்பெற்றன. நாடகக்குழு உறுப்பினர்களோடு தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் பங்கேற்று நடித்தனர்.

தன்யா மாதவன்,
சான் அன்டோனியோ, டெக்சஸ்

© TamilOnline.com