ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்


ஆதவன் நாயகனாக அறிமுகமாகும் படம் இது. நாயகி அவந்திகா. இவர்களுடன் கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன், நெல்லை சிவா, மதுமிதா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, எழுதி, இயக்குகிறார் எம். அழகுராஜ். காதல், காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது. “ஆதவனும் அவந்திகாவும் காதலர்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். அவந்திகாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறப் போகும் நேரத்தில், திருமணத்தைத் தடுக்க நாயகன் ஒரு கேங்க்ஸ்டர் குழுவுடன் பொள்ளாச்சி செல்கிறார். அப்புறம் என்ன ஆனது என்பதைக் கலகலப்பாகச் சொல்லியிருக்கிறோம்” என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com