எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?


அகில் நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகிகளாக இஷாரா நாயர், ரஹானா, சஹானா ஆகியோர் நடிக்கின்றனர். கிருஷ்ணப்ரியா என்ற புதுமுகமும் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார். மனோபாலா, பாலாசிங், சூப்பர் சுப்பராயன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், கௌசல்யா, ஷகீலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை விஜய் சாகர், சக்தி செல்லம் எழுத, இசையமைக்கிறார் சு. வர்ஷன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெவின். சினிமா வாய்ப்புத் தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் கதாநாயகன், முதலில் தோல்வியுற்றுத் திரும்புகிறான். பின்னர் பண்ணையார் உதவியுடன் மீண்டும் நகரத்துக்கு வருகிறான். அவன் ஜெயிக்கிறானா, இல்லையா என்பதுதான் கதை என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com