கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
‘ஆட்டோகிராப்’ கோபிகா விரைவில் அமெரிக்கா வரவிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘சாந்து பொட்டு’, ‘கீர்த்தி சக்ரா’, ‘மாயாவி’ ஆகிய மலையாளப் படங்கள் தொடர்ந்து கேரளாவில் வெற்றி பெற்றதை யடுத்து, அமெரிக்காவில் வாழும் மலையாளி கள் கோபிகாவுக்குப் பாராட்டுவிழா ஒன்றினை ஜூன் மாதம் நடத்த விருக்கிறார்கள். விழாவில் கலந்து கொள்ள கோபிகாவும் முடிவு செய்துவிட்டார்.

நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவில் கோபிகாவிற்கு ‘பத்மினி விருது’ அளிக்கப்படவிருக்கிறது. மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினியின் நினைவாக இந்த விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com