12.12.1950


இப்படியொரு மாறுபட்ட தலைப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த நாள் நடிகர் ரஜினியின் பிறந்த நாள். ரஜினி ரசிகன் ஒருவரது கதைதான் படம் என்பதால் இத்தலைப்பைச் சூட்டியுள்ளனர் என்கிறார் கோலிவுட் கோவிந்து. நாயகனாகச் செல்வா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் டெல்லி கணேஷ், தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இளம் இசையமைப்பாளர்கள் ஆதித்யா – சூர்யா இசையமைக்கின்றனர். எழுதி, இயக்குகிறார் செல்வா. இந்தப் படத்தில் இவர் 'கபாலி' ரஜினி கெட்டப்பில் நடிக்கிறார் என்று காதில் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com