மீண்டும் பில்லா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடித்து, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகித் தமிழகம் எங்கிலும் சக்கைப் போடு போட்ட படம் ‘பில்லா’. அது மீண்டும் புதிய பொலிவுடன் தயாராகவிருக்கிறது.

புதிய ‘பில்லா’வில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் அஜித்குமாரும், ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் நயன்தாராவும் நடிக்கிறார்கள். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நமீதா, ரகுமான் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆனந்தா பிலிம் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து அளிக்கவிருக்கிறது.

பா. விஜய்யின் பாடல்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, வசனத்தை ராஜ் கண்ணன் எழுதுகிறார். திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை விஷ்ணுவர்த்தன் கவனிக்கிறார். இவர் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘குறும்பு’ போன்ற படங்களை இயக்கியவர். மே மாதம் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறது.

பில்லா மட்டுமல்ல; கே.பாலசந்தர் இயக்கத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘நான் அவனில்லை’ படமும் ரீமேக் செய்யப்பட விருக்கிறது. இது புனர்ஜன்மக் காலம் போலும்!

கேடிஸ்ரீ

© TamilOnline.com