காலா
ரஜினி நாயகனாக நடிக்கும் படம் 'காலா'. நாயகிகளாக ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேலா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கபிலன், உமாதேவி பாடல்களை எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். எழுதி இயக்குகிறார் பா. ரஞ்சித். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் '2.0' படத்தை அடுத்து, 2018ல் இப்படம் வெளியாக உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ். அவர் இதில் இளவயது ரஜினியாக நடிக்கிறாராமே!



அரவிந்த்

© TamilOnline.com