தொடர்ந்து பயணிக்கிறது காலம்
நமக்குப் புரியாததை
தொலைத்து விட்டோம்

அவை
தவறான முகவரிக்கு
அனுப்பப்பட்டு விட்டன

மனநிலையை
வெளிப்படுத்திய சின்னங்கள்
யார்க்கும்
முக்கியத்துவம் இல்லாதாயின

நவீன தத்துவங்களின்
ஆழத்தை அறியாமல்
மூழ்கித் தவித்த
முதுகுகளில்
தொடர்ந்து பயணிக்கிறது
காலம்

ம. ராமகிருஷ்ணன்

© TamilOnline.com