இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது
பாரத அரசு வழங்கும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண், பெப்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி அவர்களுக்கு 2007 ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. பாரத குடியரசுத் தலைவர் திருமிகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் டெல்லி ராஷ்டிரபதி பவனத்தில் நடந்த ஒரு சிறப்பு விழாவில் இதனை அளித்து கவுரவித்தார். விழாவில் பிரதமர் மன்மோஹன் சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மொத்தத்தில் 50 பத்ம விருதுகள் வர்த்தகம், சட்டம் மற்றும் நீதி, இதழியல், கலை, மருத்துவம், கல்வி போன்ற துறையில் சிறந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. 106 வயதான ஹகீம் சையத் மொஹம்மத் ஷர்·புதீன் காத்ரி (யுனானி மருத்துவம்) விருது பெற்றவர்களில் ஒருவர்.

திருமதி நூயியுடன் பத்மபூஷண் விருது பெற்றவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் காவலம் நாராயண பணிக்கர் (நாடகம்), சுனில் பாரதி மித்தல் (வர்த்தகம்), டாக்டர் ராஜா செல்லையா (பொருளாதாரம்), ஜஸ்டிஸ் பி.என். பகவதி (நீதித்துறை).

© TamilOnline.com