டெக்சஸ்: பங்குனி உத்திரம்
2017 ஏப்ரல் 8, 9 நாட்களில் டெக்சஸின் டாலஸ் மாநகரத்தில் உள்ள DFW ஹிந்துக் கோவிலில் பங்குனி உத்திரம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் எனச் சுமார் 45 பேர் முருகனுக்குக் காவடியும், 50 பேர் பால்குடமும் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. துதிப்பாடல்கள் பாடப்பட்டன. பாடல் ஒன்றைப் புல்லாங்குழலில் ஒருவர் வாசித்து மகிழ்வித்தார்.

அடுத்த நாள் பக்தர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய பயணம் மதியம் 12:30 மணிக்கு கோவிலைச் சென்றடைந்தது. கந்த சஷ்டி கவசம் படித்து வழிபாடு நடந்தது. பங்குனி உத்திரம் தமிழ்க் கடவுளாகிய முருகனுக்குக் கொண்டாடப்படும் சிறந்த விழாவாகும். இந்நாளில் முருகப்பெருமான் தெய்வானையை மணம் கொண்டதாக ஐதீகம்.

சசி பாலா,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com