ப்ளேனோ தமிழ்ப்பள்ளி 16வது ஆண்டு விழா
ஏப்ரல் 25, 2017 அன்று டாலஸ் மாநகரத்தின் முதல் தமிழ்ப் பள்ளியான ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் 16வது ஆண்டுவிழா கார்லண்ட் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. மழலை முதல் நிலை எட்டு வரையிலும் பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் மேடை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் எடுத்துக் காட்டும் வகையில் நாடகம், நடனங்கள் இடம்பெற்றன.

டெப்பி கிலப்ஸி, ஜான் க்ளாஸ் (ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள்) முக்கிய விருந்தினர்களாகப் பங்கேற்றனர். பிரையன் டாட்ஸன் (துணைத்தலைவர், ஃப்ரிஸ்கோ கல்வி மாவட்ட அறங்காவலர் குழு) சிறப்பு விருந்தினர்.

ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கூடுதல் தேர்வு இல்லாமலேயே, ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் சான்றிதழுக்குக் இந்தக் கல்வி மாவட்டத்தின் கல்வி மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ராதிகா வரவேற்புரை ஆற்றினார். ஸ்ரீராம் விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். மகாலட்சுமி மற்றும் ரம்யா தொகுத்து வழங்கினார்கள். விசாலாட்சி வேலு நன்றி தெரிவித்தார்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com