கணிதப்புதிர்கள்
1) ஒரு குளத்தில் சில தாமரைப் பூக்கள் இருந்தன. அங்கே சில வண்டுகள் வந்தன. 1 பூவுக்கு 1 வண்டு என அமர்ந்தபோது 8 வண்டுகள் மீதம் இருந்தன; 1 பூவுக்கு 2 வண்டுகளாய் அமர்ந்த போது 4 பூக்கள் மிஞ்சின என்றால், வண்டுகள் எத்தனை, மலர்கள் எத்தனை?

2) 1, 4, 27, 256........ வரிசையில் அடுத்து வரக் கூடிய எண், எது ஏன்?

3) ராமு $100 எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றான். கடையில் ஒரு புத்தகத்தின் விலை $15; ஒரு பேனாவின் விலை $1; ஒரு பென்சிலின் விலை $.25 என்று இருந்தது. ராமு 100 டாலருக்கும் இவற்றை வாங்கினான். வீட்டிற்கு வந்து பார்த்தால் அவற்றின் மொத்த எண்ணிக்கையும் நூறாக இருந்தது. அவன் எதெதை எத்தனை வாங்கியிருப்பான்?

4) தாத்தா ஒரு பெட்டியில் சில சாக்லேட்டுகளை வைத்திருந்தார். அங்கு வந்த பேரன் சாக்லேட் கேட்டான். அவனுக்கு இரண்டு சாக்லேட்டுகளைத் தந்த தாத்தா, “இந்தப் பெட்டியில் உள்ள சாக்லேட்டுகளையும், அதைப்போல பத்து மடங்கையும், அதில் பாதியையும், உன் கையில் இருப்பதையும் சேர்த்துக் கூட்டினால் மொத்தம் ஐம்பது வரும். அப்படியானால் பெட்டியில் எத்தனை சாக்லேட்டுகள் உள்ளன என்று சொல். எல்லாச் சாக்லேட்டையும் உனக்கே தந்து விடுகிறேன்” என்றார். சிறிது யோசித்த பேரனும் சரியான விடையைச் சொல்லிவிட்டான். அவன் சொன்ன விடை என்ன?

5) வரிசையாக இலக்கமிடப் பட்ட 5 வீடுகளின் கதவெண்களை ஒன்றுவிட்டு ஒன்றாகக் கூட்டினால் வரும் தொகை 275 என்றால் அந்த எண்கள் என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com