ஒரு முகத்திரை


ரகுமான் நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு முகத்திரை'. உடன் அதிதி ஆச்சார்யா, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி, பாண்டு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை மதன் கார்க்கி, அண்ணாமலை, பிரியன் எழுத, பிரேம்குமார் இசையமைக்கிறார். எழுதி, இயக்குகிறார் ஆர். செந்தில்நாதன். “இப்படத்தில் ஃபேஸ்புக்தான் கதாநாயகன். வில்லனும் அதே ஃபேஸ்புக்தான். ஒரு சைக்காலஜி டாக்டர், சைக்காலஜி ஸ்டூடண்ட், ஐ.டி. துறை இளைஞர் இவர்களைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. சைக்காலஜி டாக்டரே சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com