படைவீரன்


பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் நாயகனாக நடிக்கும் படம் 'படைவீரன்'. நாயகியாக அம்ரிதா அறிமுகமாகிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் 'கல்லூரி' அகில், கலையரசன், இயக்குநர் விஜய் பாலாஜி, இயக்குநர் மனோஜ்குமார், நித்தீஷ், இயக்குநர் கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தனா. இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும், அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையும் தான் இப்படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com