தெரியுமா?: ஸ்ரீஜா சங்கரநாராயணன்
சுவரில் கிறுக்குகிற வயதே ஆன ஸ்ரீஜா சங்கரநாராயணன் வரையும் ஓவியங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கற்பனை, வண்ணத்தேர்வு, கோடுகள் எல்லாமே அவரது 6 வயதை மீறியனவாக இருக்கின்றன. அதனால்தான் அவர் பயிலும் ஜான் மோர்ஹெட் ஸ்டெம் அகடெமி (சார்லட், வடகரோலினா) அவருடைய ஓவியங்களை ஸ்பிரிட் ஸ்க்வேரில் உள்ள நைட் கேலரியில் மார்ச் மாதம் முழுவது நடைபெறும் 2017 K-5 Youth Art Exhibit காட்சிக்கு அனுப்பத் தேர்ந்தெடுத்தது. அவருடைய பள்ளி சார்லட் மெக்லென்பர்க் பள்ளிகளின் (CMS) கீழ் வருகிறது. ஸ்ரீஜாவுக்கு பாராட்டுச் சான்றிதழ் ஒன்றை CMS வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மற்றும் சத்யா தம்பதியினரின் மகள் ஆவார் ஸ்ரீஜா.

Click Here EnlargeClick Here Enlarge
Click Here Enlarge


சோமசுந்தரம் வீரபாகு,
சார்லட், வடகரோலினா

© TamilOnline.com